பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்,முசலி,நானாட்டான் வாழ்வாதாரத்தில் பண மோசடிகள்! பயனாளிகள் விசனம்

(இம்ரான் அலி மன்னார்)

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மன்னார் பிரதேச செயலகம்,  முசலி பிரதேச செயலகம் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகம்  ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்ட வாழ்வாதாரமான மாடு, நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம்,மீன்பிடிப்பாளர்களுக்கான வலை மற்றும் ஏனைய உபகரணங்கள் ஆகியவற்றில் மாபெறும் பண மோசடி இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச பயனாளிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் தெரிவிக்கையில்;

ஒவ்வெரு பயனாளிக்கும் அரசாங்கத்தினால் ஒரு லச்சம் ரூபா (100000)ஒதுக்கப்பட்ட போதும் அந்ந பணத்திற்குரிய பெறுமதியான உபகரணங்கள்,மாடுகள் கிடைக்கபெறவில்லை என்றும்,மாடுகளை கொள்வனவு செய்ய உரிய பயனாளிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக பால் (மாடு) பண்ணைகளுக்கு உரிய பயனாளிகளை  அழைத்து சென்ற போதும் அவர்கள் தெரிவு செய்த மாடுகள் மற்றும் குட்டிகள் கிடைக்கபெறவில்லை என்றும், இன்னும் சில பயனாளிகளுக்கு உரீத்தான வாழ்வாதாரம் கிடைக்கப்பெறவில்லை என்றும் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இந்த திட்டத்தில் கிராம அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட கருத்திட்ட உத்தியோகத்தர்கள் அதிகமாக பணங்களை கொள்ளை அடித்துவிட்டார்கள் என்றும் கவலை தெரிவிக்கின்றார்.

அத்துடன் காப்புறுதிகள் சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் அறியமுடிகின்றது.

எனவே சம்மந்தப்பட்ட வன்னி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பயனாளிக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பயனாளிகள் தெரிவிக்கின்றார்கள்.

Related posts

இனவாத நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ -முஜீபுர் றஹ்மான்.

wpengine

இராணுவத் தளபதி மடு தேவாலயத்திற்கு திடீர் விஜயம்

wpengine

ரவி பதவி விலக வேண்டும்! ரஞ்சன் ராமநாயக்க

wpengine