பிரதான செய்திகள்

மன்னாரில் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை  பெய்த  மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 

குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் , எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள  வீடுகளும் , பாதைகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம் பெயர வேண்டிய சூழ் நிலையும் ஏற்படும் என தெரிய வருகின்றது.

Related posts

இலங்கை : 236 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுகளும் இழப்பு

wpengine

பொது­ப­ல­ சேனா அமைப்பு அடிப்­படை வாத இன­வாத இயக்­கம் -விமல் வீர­வன்ச

wpengine

மன்னார் வைத்தியத்துறையினரின் இனவாத ஓரங்கட்டலால் பாதிக்கப்படும் முசலி

wpengine