பிரதான செய்திகள்

மன்னாரில் அரிய வகை கூகை ஆந்தை

மன்னார், கோந்தை பிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நீர் தாங்கி இன்று (15) இராணுவத்தினரின் உதவியுடன் தகர்க்கப்பட்டது.

அந்த நீர் தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன், நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்த நிலையில், இன்று வெடிப்பின் காரணமாக இறக்கை ஒன்று உடைந்த நிலையில் தாங்கியின் சிதைவுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சர் தயா கமகேயின் இனவாத செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!-பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான்

wpengine

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine

அடுத்த வருடத்தின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் – பைஸர் முஸ்தபா

wpengine