பிரதான செய்திகள்

மத்தள விமான நிலையத்தில் 300 யானைகள், 1000 மான்கள் நிர்கதி! காமினி ஜயவிக்ரம பெரேரா

மத்தள சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் 300 காட்டு யானைகளும், 1000 மான்களும் நிர்கதியாகியுள்ளதாக நிரந்தர அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஹம்பாந்தோட்டை அரசியல்வாதிகள், விமான நிலைய அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல்களை நடாத்த எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மொட்டுக்கட்சியின் அமைச்சராக இலங்கையின் பிரபல தம்மிக்க பெரேரா

wpengine

YMMA பேரவையின் 66வது மாநாடு இன்று பிரதம அதிதியாக சபாநாயகர்

wpengine

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த அணி

wpengine