பிரதான செய்திகள்

மடு,தேவன் பிட்டி பாடசாலையினை திறந்து வைத்த கல்வி அமைச்சர்

மடு வலயக்கல்விப் பணிமனைக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மன்- தேவன் பிட்டி ஆரம்ப பாடசாலை இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மடு வலயக்கல்விப்பணிப்பாளர் மாலினி வெனிட்டன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் யூ.என்.கெபிட்டா நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் இந்த ஆரம்ப பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின்போது, யூ.என்.கெபிட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

சீனாவுக்கு முன் ரணில் ,மஹிந்த பேசி­யது என்ன?

wpengine

முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு அறிக்கை விடும் ஹுனைஸ் பாரூக்

wpengine

கிழக்கு ஆளுநனர் தமிழர்கள் சுடுகுது மடியப்பிடி என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

wpengine