பொதுநோக்கு மண்டபம் திறந்து வைத்த வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

(ஊடகபிரிவு)
முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு, வள்ளுவர் புரத்தில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் 01 மில்லியன் ருபா நிதி ஒதுக்கீட்டில், வள்ளுவர் புரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தை, நேற்று (26) மாலை 4.00 மணியளவில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் முல்லை மாவட்ட உறுப்பினர் கந்தையா சிவநேசன், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் இன்னும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.