Breaking
Thu. Sep 12th, 2024

(அபூ செய்னப்)
சிந்தனை வட்டத்தின் நிறுவனரும்,இலக்கியவாதியும்,கல்வியாளருமான நண்பர் புன்னியாமீன் அவர்கள் மரணித்த செய்தி கேள்விப்பட்டு மிகுந்த மனத்துயர் அடைந்தேன். இன்னாலில்லாஹி     வஇன்னாஇலைஹி ராஜிஊன். அவர் நமது சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக மிகுந்த உற்சாகத்துடன் பாடுபட்டவர், சிறந்த எழுத்தாளர்.

சிந்தனை வட்டம் எனும் நிறுவனத்தை உருவாக்கி பல நூற்றுக்கணக்கில் கல்வியியல் நூல்களையும்,இலக்கிய நூல்களையும் வெளிக்கொணர்ந்தவர். மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து பணிபுரிந்தவர்,ஆசிரியராக அவர் ஆற்றிய பணி மகத்தானது, உயர்தர அரசியல் பாடத்தினை மிகவும் நுட்பமான முறையில் அவர் கற்பித்தாகவும்,அவரிடம் உயர்தர அரசியல் பாடம் கற்ற மாணவர்கள் பலர்  உயர் சித்திகளை அடைந்ததனையும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.  பழக இனிமையான நல்ல மனம் கொண்ட மனிதர்.

அவரது பிரிவினால் துயரம் அடைந்துள்ள அவரது குடும்பத்திற்கு எனது மனத்துயரையும்,ஆழ்ந்த  அநுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது பாவங்களை எல்லாம் வல்ல இறைவன் மன்னித்து உயர் சொர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *