பிரதான செய்திகள்

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரும் வரை நல்லத்தண்ணியில் காத்திருக்கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவருடனும் இணைந்து சிவனொளிபாத மலையில் ஏற இன்னும் தான் நல்லத்தண்ணியில் காத்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமாஹாராமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிவனொளிபாத மலையில் ஏறுவதற்கு எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரும் வரை நல்லத்தண்ணியில் காத்திருக்கின்றேன். முடிந்தால் மலையில் ஏறும் போது சந்திக்கலாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அனைவரும் இணைந்து ஒரே பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கொலை செய்ய ஜீ.எல்.பீரிஸ் தாமரை மொட்டு என்ற தூக்கு கயிற்றை போட்டுள்ளார் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான புதிய வழிகாட்டி அமைச்சர் றிஷாட்

wpengine

இஸ்லாம் அன்பின் மார்க்கம் -ஒப்புக்கொண்ட போப் (விடியோ)

wpengine

சிறந்த 100 விஞ்ஞானிகளில் உள்வாங்கப்பட்ட 5 இலங்கையர்கள்!

Editor