பிரதான செய்திகள்

பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பகுதிக்கு விஜயம் செய்த பிரதி இராஜங்க அமைச்சர்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ, கொடப்பிட்டிய பகுதிக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று பிற்பகல் விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, பிரதி அமைச்சர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து மக்களின் அவசர தேவைகள் தொடர்பாக, கொடப்பிட்டிய பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களிடம் கலந்தாலோசித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் றிஸாட் பதியுதீன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்கும் உதவிகள் சென்றடையும் வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் கொடப்பிட்டிய பள்ளிவாசலிலே அந்த பகுதியைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா 1பில்லியன் டொலர் கடன்! மருந்துக்கள் இறக்குமதி

wpengine

அரசாங்கம் வழமை போன்று முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை தூண்ட ஆரம்பித்துள்ளது

wpengine

ஆயுதக்களஞ்சியசாலை தீ விபத்து ! மக்களை பார்வையிட்ட மஸ்தான் (பா.உ)

wpengine