பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பயங்கரவாத தடுப்பு, விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸார் ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரான வி.எஸ்.சிவகரனை கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலை ஆகும் போது அன்றைய தினம் குறித்த அமைப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உப்பிற்கான புதிய விலைகள் அறிவிப்பு!

Maash

போனஸ் ஊடாக பாராளுமன்றம் செல்லும் ரணில்- அர்ஜூன ரணதுங்க

wpengine

தடை ஏற்பட்டால் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine