பிரதான செய்திகள்

பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பிரதான பாடங்களுக்காக ஒன்பது மாகாணங்களுக்கு அமைய இந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

Related posts

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

wpengine

பங்களாதேஷில் தஞ்சமடையும் ரோஹிங்யா முஸ்லிம்! உணவின்றி வாடும் நிலை

wpengine

உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக உதைபந்துகள் வழங்கி வைப்பு

wpengine