நெல் கொள்வனவு தாமதம்! மட்டக்களப்பு விவசாயிகள் விசனம்

நாடளாவிய ரீதியில் நெல் கொள்வனவு தற்போது இடம்பெற்றுவருகின்ற போதிலும், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

உரிய நேரத்தில் நெல் கொள்வனவு இடம்பெறாமையால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபை தற்போது நாடளாவிய ரீதியில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்து வருகின்றனது.

எனினும், மட்டக்களப்பில் நெல் கொள்வனவு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டமையால் பாரிய நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் நாட்களில் தமது உழைப்பிற்கான உரிய விலையைப் பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares