பிரதான செய்திகள்

நுவரெலியா மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு அநீதி! அமீர் அலி நடவடிக்கை

நுவரெலியா மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கெதிரான உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

2019ம் ஆண்டில் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காலி,நுவரவலியா மாவட்டங்களுக்கான புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான அறிவித்தல் காலி மாவட்டத்தில் முழுமையான செயலகங்களாகவும்,நுவரெலியாவில் உபசெயலகங்களாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது இன ரீதியான பாரபட்சம் என்பதனை கண்டித்தும், ஒரே வர்த்தமானி அறிவிப்பு மாவட்டங்களுக்கிடையே இரு வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுவதை கண்டித்தும் மலையக அரசியல் அரங்கத்தினால் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்களின் தலைமையில் இடம் பெரும் கையெழுத்து சேகரிக்க்கும் நிகழ்வில் எனது ஆதரவையும் வெளிப்படுத்தி இன்று கையெழுத்திட்டேன்.

எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும்,கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக எல்லை பிரிப்பு செயற்பாட்டை ஒத்ததாகவே இந்நிகழ்வும் காணப்படுகிறது.

இந்நாட்டில் பெரும்பான்மை சமூகம் நிர்வாக ரீதியாக எமக்கு இழைத்துக்கொண்டிருக்கும் அநீதிக்கெதிராகப் போராடிக்கொண்டிருக்கும் நாம் இன்னொரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளை சிறுபான்மை இனத்தின் நியாயமான அபிலாசைகளை மதித்து நடக்க வேண்டியது கட்டாயம் என்பதனையும் இவ்விடத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வலியுறுத்த விரும்புகிறேன்.

Related posts

பொருளாதார நெருக்கடியை மேம்படுத்த 90 கோடி அமெரிக்க டொலர் இலங்கைக்கு.

Maash

திகன கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியமைக்காக பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்!

wpengine

20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர்

wpengine