பிரதான செய்திகள்

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை போன்ற நிறுவனங்களின் ஊழல் மோசடி முடக்கம்

பாரிய மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்படாமையினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதியுடன் பூர்த்தியாகின்றது.

இதுவரையில் இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு குறித்து அறிவிக்கப்படவில்லை.

ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்படா விட்டால் பல விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் பதவிக் காலம் நீடிக்கப்படுவது குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படுவது வழமையானதாகும்.

எனினும், இந்த ஆணைக்குழுவின் பதவிக் கால நீடிப்பு குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மரிச்சிகட்டி- புத்தளம் பாதை மீண்டும் மூடபட்டுள்ளது. எப்போது திறக்கப்படும்?

wpengine

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார்

wpengine

மங்களவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஆப்பு

wpengine