பிரதான செய்திகள்

நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மீண்டும்.

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


விடுமுறை பெற்றுள்ள முப்படையினர் முகாம்களுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்தது.


எனினும் இந்த நடவடிக்கை காரணமாக நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக் ஆபாச விடியோ! வைரஸ் கீளிக் பண்ணவேண்டாம்.

wpengine

சுயாதீன குழு 5 உறுப்பினர்கள் மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம்

wpengine

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்ல நடவடிக்கை

wpengine