பிரதான செய்திகள்

தேர்தலின் பின்பு கோத்தாவுடன் இணைவும் சஜித்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப்பெற்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட தயார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.


சஜித் பிரேமதாசவினால் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை நடைமுறை அரசாங்கத்தின் சில பிரிவுகள் ஜனாதிபதியின் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.


இதேவேளை ஜனாதிபதி தாம் சொல்வதை செயலால் காட்ட வேண்டும் என்றும் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்தார்.

Related posts

2வது நாளாகவும் தொடர்ந்த மன்னார் சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம்!

Editor

சாக்கடை அரசியலை மேற்கொண்டு நாட்டை அழிவுப் பாதையில் இட்டு செல்லப்பட்டுள்ளது.

wpengine

முஸ்லிம்களுக்கெதிராக இனவாத தாக்குதல்! இரண்டு அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன

wpengine