தாஜூதீனின் கொலை பொறுப்பதிகாரி சிறை

றக்பி வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பான ஆதாரங்களை மறைக்க முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நாரஹேன்பிட்டிய காவல்நிலையத்தின் முன்னாள் குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி எதிர் வரும் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அவரை பிரசன்னபடுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசிய காவல்துறையினரால் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி ஷாலிகா மைதானத்திற்கு அருகில், எரியுண்ட சிற்றூர்தி ஒன்றில் இருந்து வசிம் தாஜூடினின் உடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது இது ஒரு விபத்து என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இது விபத்தல்ல கொலையே என கண்டறியப்பட்ட நிலையில் விசாரணைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares