பிரதான செய்திகள்

தாஜூடீன் விவகாரம் – பொலிஸ் அதிகாரியின் வாக்குமூலத்தில் முரண்பாடு

றகர் வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் சாட்சிகளை மறைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள, நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு முன்னாள் பிரதானி, பொலிஸ் பரிசோதகர் சுமித் பெரேரா எதிர்வரும் 12ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த பொலிஸ் அதிகாரியால் வழக்கப்பட்டுள்ள வாக்குமூலம் முரண்பாடாக உள்ளதாக, இரகசியப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர் இந்தக் கொலை தொடர்பில் தகவல் அறிந்திருப்பாரா என சந்தேகம் எழுவதாகவும், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நாட்டின் சட்டத்திற்கு இணங்க கடமை புரிந்த ஒருவர் எனவும், அவரை பினையில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் 12ம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

அன்றையதினமே பிணை மனுவை சமர்ப்பிக்குமாறும் நீதவான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மன்னார் இ.போ.ச பஸ் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு (படங்கள்)

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் இல்லை

wpengine

சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்ககூடாது! வவுனியாவில் கண்டனம்

wpengine