தாஜுதீனின் மரண விசாரணைக்கு கால அவகாசம்

2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணவிசாரணைக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இரண்டு மாதகால அவகாசத்தை இன்று புதன்கிழமை வழங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சி.சி.டி.வி கமெராவில் பெற்றுக்கொள்ளப்பட்ட காட்சிகள் அடங்கிய அறிக்கை, வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் வேறு காட்சிகளை தேடிக்கொள்வதில் கடினமானது என்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கு மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares