உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ட்ரம்ப் வடகொரியா மீது தாக்குதல் நடத்த நடவடிக்கை ஐ.நா வில் தீர்மானம்

வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான பாதுகாப்புக் குழுவில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் ஐ.நா.வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பதிவேற்றதில் இருந்து முதல் முறையாக வடகொரியா மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இதுவாகும்.

அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் வடகொரியாவில் இருந்து நிலக்கரி, இரும்பு, மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வகையான ஏற்றுமதிகளின் மூலம் வடகொரியா 300 கோடி அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க தூதவர் நிக்கி ஹாலே கூறும் போது,

சீனா மற்றும் ரஷ்யாவில் புதிய தடை முழுமையாக நிறைவேற்றப்படும் போது வடகொரியாவுக்கு சிக்கல் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

இந்த இரண்டு நாடுகளும் வடகொரியா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வியாபாரங்களை செய்து வருகிறது.

ஜூலை 4 மற்றும் 28ம் திகதிகளில் வடகொரியா சக்தி வாய்ந்த ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.

இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பின் வடகொரியா மீது கொண்டு வரப்படும் 7-வது தடை தீர்மானமாக இது அமைந்தது.

Related posts

ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மோசடிகள் முறைப்பாடு

wpengine

பிள்ளையினை பெற்று 11நாட்களில் குப்பையில் வீசிய மாணவி!

wpengine

மின்னல் ரங்காவினால் மூக்குடைந்த ஹூனைஸ் பாரூக்

wpengine