ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு

ஜேர்மன் நாட்டின் மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமியப் பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமியரான முத்ரீம்  ஆர்ஸ் என்ற 50 வயதுடைய பெண்ணே, படீன் – வுட்டம்பேர்க் மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும். முத்ரீம்  ஆர்ஸ் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

இவரது பெற்றோர் துருக்கி நாட்டிலிருந்து ஜேர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் நகருக்கு குடிபெயர்ந்துள்ளதுடன் இவரது தந்தை பாரந்தூக்கி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தாய் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜேர்மனியின் கிரீன் கட்சியை சேர்ந்த முத்ரீம்  ஆர்ஸ், படீன் – வுட்டம்பேர்க் என்ற மாகாணத்தின் வரி மற்றும் நிதி தொடர்பான அரசு ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares