சவுதி அரேபியாவில் நாய்க்கான கடை! அல் கோபரில் திறக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் நாய்களுக்கான முதலாவது உணவகம் கடலோர நகரமான அல் கோபரில் திறக்கப்பட்டுள்ளது.


அங்கு செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் தங்கள் நாய்க்குட்டிகளுடன் செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாத்தில், நாய்கள் பூனைகளைப் போலன்றி அசுத்த விலங்குகளாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை சவுதி அரேபியாவில் பொது இடங்களில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது, இந்த புதிய நாய்களுக்கான உணவகம் மூலம் நிலைமை மாற்றமடைந்துள்ளது.


செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு கடற்கரை நகரமான கோபரில் ஜூன் மாதத்தில் “ தி பார்கிங் லாட் ” என்ற நாய்களுக்கான உணவகம் கதவுகளைத் திறந்து வருவதாக கூறப்படுகிறது.


வீட்டிற்குள் வெளியே செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல சில இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் இந்த செய்தி விலங்கு பிரியர்களை மகிழ்வித்துள்ளது.


முன்னதாக, சவுதி அரேபியா நாட்டின் மத காவல்துறை செல்லப்பிராணிகள் வெளியில் நடப்பதை தடைசெய்தது. ஆண்கள் பெண்களுக்கு தூது அனுப்பும் வழிமுறையாக இதைப் பயன்படுத்துவதாகக் தெரிவிக்கப்பட்டது.


இருப்பினும், செல்லப்பிராணிகள் பெருகி வருவதால் இந்த தடை பெரும்பாலும் மக்களால் உடைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பல நகரங்களில் விலங்கு தங்குமிடங்கள் உருவாகியுள்ளன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares