உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவுதி அரேபியாவின் எண்ணெய்வள அமைச்சர் பதவி நீக்கம்

சவுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் வள அமைச்சராக இருந்த அலி அல்-நய்மி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பரந்துபட்ட அளவில் மன்னரால் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க சீர்திருத்ததின் ஒரு பகுதியாக அவரது பதவி நீக்கமும் இடம்பெற்றுள்ளது.

அவருக்கு பதிலாக சுகாதார அமைச்சராக இருந்த காலிதி அல்-ஃபாலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி மற்றும் தொழில்த்துறை என்ற புதிய அமைச்சுக்கு அவர் தலைமை வகிப்பார்.

முன்னர் மன்னர் சல்மானின் உத்தரவிற்கு அமைய மேலும் பல அமைச்சர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

சவுதியின் பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருப்பதை குறைத்து, அதன் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தும் நீண்டகால பொருளாதார மறுசீரமைப்பை நோக்காக கொண்ட திட்டம் ஒன்றுக்கு கடந்த மாதம் அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

Related posts

தமிழ் நாட்டில் கொரோனா அதிகரிப்பு நாளை மூடக்கம்-தமிழக அரசு

wpengine

புத்தள மாவட்ட ஆசிரியர்கள் நியமனம்! மேசை மீது ஏறி போராட்டம் நடாத்திய நியாஸ்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு

wpengine