பிரதான செய்திகள்

சஜித்துடன் முரண்பட்ட ஹர்ஷ டி சில்வா மீண்டும் இணைவு

தாமும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின்கீழ் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாவட்டத்தில் தாம் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையில் பொருளாதார நிபுணரான ஹர்ஷ, ஐக்கிய தேசியக்கட்சியில் ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசியாக செயற்பட்டவராவார்.


ரணில் – சஜித் முரண்பாடு தோன்றியபோது அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக ஹர்ச டி சில்வா தெரிவித்து வந்த நிலையில் தற்போது சஜித்தின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.


இதேவேளை தாம் பதவிவகித்த காலத்தில் தமது முழு பங்களிப்பை வழங்கியுள்ளதாக ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சதொச நிறுவனத்திற்கு அபராதம்

wpengine

இந்தியாவில் நான்கு திசை மாநிலங்கள்! அலங்கரிக்கும் பெண் முதல்வர்கள்

wpengine

முசலி வர்த்தகமானி அறிவித்தல்! மீண்டும் வருகை தரும் ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine