பிரதான செய்திகள்

கெகுணகொல்ல அரபுக்கல்லூரி மாணவர் இருவர் நீரில் முழ்கி மரணம்

(றிம்சி ஜலீல்)

குருநாகல் ,கெகுணகொல்ல அறக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி
மாணவர்கள் இருவர், மாவிலாறு குளத்தில் தோணி கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி, இன்று (15) உயிரிழந்துள்ளனரென
சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

கெகுணகொல்ல – அறக்கியால பகுதியைச் சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11
வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது) ஆகியோரே இவ்வாறு
உயிரிழந்துள்ளனர்.குறித்த அரபிக்கல்லூரி மாணவர்கள், மூதூர் சென்ற போது, மாவிலாறு குளத்தைப்
பார்வையிட சென்ற வேளை, தோணியில் பயணித்ததாகவும் அதனையடுத்து, தோணி
கவிழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில்
வைக்கப்பட்டு  இன்று (16) ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது .

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொதுஜன பெரமுனவில் இணைந்த முன்னால் அமைச்சர்

wpengine

றிஷாட்,ரவூப் ஹக்கீம்,கணேசன்,பழனி, ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை

wpengine

27,932 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன், 16 மரணங்களும் இடம்பெற்றுள்ளன.

Maash