பிரதான செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சிக்கு பயந்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்தமுடியாது! பைஸர் முஸ்தபா

கூட்டு எதிர்க்கட்சியின் கூக்குரலுக்குப் பயந்து உரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்ளாமல் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று கண்டி, மடவளை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தியடையவில்லை. அதனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக பூர்த்தி செய்யவும் முடியாது.

எல்லைகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடையாமல் தேர்தலை நடத்த முடியாது.

இதனையெல்லாம் அறிந்து கொண்டும் அரசியல் இலாபத்துக்காக கூட்டு எதிர்க்கட்சியினர் தேர்தலை நடத்துமாறு கூக்குரலிடுகின்றனர்.

தேர்தலை நடத்த அரசாங்கம் அச்சப்படுவதாகவும், தோல்வி அடைந்து விடுவோம் என்று பயந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் போலியான வாதம் ஒன்றை முன்வைக்கின்றார்கள்.

ஆனால் அவர்களின் கூக்குரலுக்குப் பயந்து உரிய வழிமுறைகளுக்கு முரணாக உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முடியாது. அரசாங்கம் அதற்கு ஒருபோதும் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

றிஷாட் மனைவி உட்பட 4பேருக்கு! ஒகஸ்ட் 23 வரை மறியல்

wpengine

அரகலய காலத்தில் அரசியல்வாதிகள் அவர்களுடைய வீடுகளுக்கு அவர்களே தீ வைத்தார்களா..?

Maash

மன்னார், மடு வலயத்தில் கடும் வறட்சி! கவனம் செலுத்துமா மன்னார் வலயம்

wpengine