பிரதான செய்திகள்

கீத் ராத் 35 ஆவது இசை நிகழ்ச்சி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

உள்நாட்டு பாடகர் கலைக்கமலின் 40 வருட கலைப்பணியை நினைவு கூரும் முகமாக கீத் ராத் 35 ஆவது இசை நிகழ்ச்சி கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தன நிலையத்தில் புதனன்று (15) இரவு இடம்பெற்றது.

இதில் பாடப்பட்ட இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீபாவின் பாடல்கள் சபையோரின் பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உள்ளக கலாசார வயம்ப அபிவிருத்தி பிரதியமைச்சர் பாலித தெவரப் பெருமவினால் முறையே என்.நஜ்முல் ஹுசைன், இரா. செல்வராஜா, எம்.ஏ.எம். நிலாம், அஷ்ரப் அஸீஸ், சிவாஜி மௌலானா, அப்துல் கையூம், அப்துல் லத்தீப், ரஷீட் எம். இம்தியாஸ், எம்.கே.எம். அஸ்வர் ஆகியோர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது பிரதி அமைச்சரும் கலைஞர்களினால் மாலை அணிவித்து  பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். அமீன் மற்றும் பிரதி அமைச்சர், கலைக்கமல், அமீர்கான் ஆகியோரையும் படங்களில் காணலாம்.

Related posts

ரோஹிங்கிய மக்களை காட்டுமிராண்டித்தனமாக வெளியேற்றிய இனவாதிகள்! அமைச்சர் றிஷாட் கவலை

wpengine

கற்பிட்டி – பாலாவி பகுதியில் வானில் சட்டவிரோதமாக இஞ்சி கடத்த முற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Maash

சதொச நிறுவனத்திற்கு அபராதம்

wpengine