கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சியில் தந்தையின் டிப்பர் சில்லில் சிக்கி, ஒன்றரை வயது பெண் குழந்தை பலி !

ளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது.

தந்தை செலுத்திய டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி இவ்வாறு குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று (18) பிற்பகல் 5:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டு, கிளிநொச்சி மாவட்டப் பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம், உடற்கூறு ஆய்வின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மஹிந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு 72 மணித்தியால அவகாசம்- பிக்குகள் ஆவேசம்

wpengine

பேரினவாத ஒடுக்கு முறைகளுமே நமது நாட்டை நிம்மதி இழக்கச் செய்கின்றது

wpengine

காலி தர்மபால பூங்கா மக்கள் பாவனைக்கு! முஸ்லிம் சிறுமியும் வரவேற்பு

wpengine