பிரதான செய்திகள்

கழிவுகளை கொட்டுவதல்! உரிமையாளர்களுக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக இரு உணவகங்களின் கழிவுகள் (குப்பைகள்) அடங்கிய 20க்கும் மேற்பட்ட பைகள் இனம் தெரியாதோரினால் வீசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதியிலுள்ள பொது மக்கள் 22-08-2016-இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையெடுத்து அங்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸ் நிலைய சூழல்,சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.செல்வராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரும்,பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து ஆராய்ந்து மேற்படி குப்பைகளை கொட்டுவதற்கு கொப்பைகளை (கழிவுகளை) வழங்கிய புதிய காத்தான்குடி பதுறியா வீதியிலுள்ள இரு ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொது இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகம்  காத்தான்குடி பொலிஸ் நிலைய சூழல்,சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.செல்வராஜா தெரிவித்தார்.unnamed (7)

அத்தோடு இரு ஹோட்டல்களிலும் இருந்து குப்பைகளை எடுத்துக்கொண்டு மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் குப்பைகளை கொட்டிய நபரை பொலிஸார் தேடி வருவதோடு உடனடியாக குறித்த கழிவுகளை விளையாட்டு மைதானத்தில் இருந்து அகற்றுவதற்கும் மட்டக்களப்பு மாநகர சபையின் உதவியை பெற்று பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.unnamed (8)

Related posts

பணத்தை வழங்க முடியாத நிலையில் தான் இந்த ஐ.தே.க அரசாங்கம் இருக்கின்றது.

wpengine

மன்னார் வைத்தியசாலையில் இரத்தானம் வழங்கும் நிகழ்வு

wpengine

மரம் முறிந்து விழுந்ததில் கணவன் பலி மனைவி காயம்

wpengine