கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி!

அரச முயற்சியான்மை அமைச்சர் கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதிலும் அது பெயரளவிலான அமைச்சுப் பதவியாகவே காணப்படுகின்றது என அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்த அமைச்சுப் பதவிக்கான நிறுவன ஒதுக்கீட்டின் போது அரச வங்கிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காணப்பட்டன.

எனினும், தமது அமைச்சின் அடிப்படையில் நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திணைக்களம் அல்லது வெறும் நிறுவனமொன்றின் அதிகாரிகளை நியமிக்கக்கூடிய சாத்தியம் கூட தமக்கு கிடைக்கவில்லை என அமைச்சர் விசனம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத் காரணமாக அமைச்சர் ஹாசீம் தமது அமைச்சுப் பதவி குறித்து பெரும் அதிருப்தியுடன் இருப்பதாகக் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares