செல்பி எடுத்தால் இடுப்பில் உதை

கனடாவில் நடைப்பெற்ற பாப் இசை நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற ரசிகையை பாடகர் எட்டி உதைத்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது. 

கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் மோட் கிளப் தியேட்டரில் கடந்த 10ம் திகதி பாப் இசை நிகழ்ச்சி நடைபெற்ற வேளை தி ஸ்டோரி சோ ஃபார் என்ற இசைக்குழு பாடியது.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் ரசிகை ஒருவர் மேடையின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றதை பார்த்த பாடகர் பார்கர் கனான் ஓடி வந்து அந்த ரசிகையின் இடுப்பில் ஓங்கி ஒரு எத்தியதில் நிலைதடுமாறிய ரசிகை மேடையில் இருந்து கீழே விழுந்தார்.

இந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த ரசிகையை அடுத்தும் பலர் மேடையில் ஏறிய போதும் யாருக்கும் அவருக்கு போன்று எத்து விழவில்லை.

இந்த சம்பவம் குறித்து மோட் கிளப்பின் பொது மேலாளர் ஜார்ஜ் டயஸ் கூறுகையில், பாடகர் இளம் ரசிகையை எட்டி உதைத்த பிறகு எங்கள் கிளப்பில் அவர்கள் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares