உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டார் விவகாரம்: சமரச முயற்சிகளில் குவைத், துருக்கி

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை சில அரபு நாடுகள் துண்டித்துள்ள நிலையில், இவர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த குவைத் மற்றும் துருக்கி தீவிர முயற்சி செய்யும் என இரு நாட்டு ஜனாதிபதிகளும் உறுதியளித்துள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கட்டாருடனான உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகள் ஐந்து அரபு நாடுகள் துண்டித்தன.

இதனால் கட்டாருடனான பல விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன.

தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.

கட்டாரில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே இப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

குறிப்பாக கட்டார் மீது தூதரக தடை விதித்த அரபு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் குவைத்தும், துருக்கியும் ஈடுபட்டுள்ளன.

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல்- ஜாபர் சவுதி அரேபியா மன்னர் சல்மானை சந்தித்து பேச வேண்டும் என வளைகுடா அரபு நாடுகளின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து இருநாடுகளின் சமாதானத்துக்கு உதவ தயாராக இருப்பதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் தீவிரவாதத்துக்கு கட்டார் நிதியுதவி அளிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

சமீபத்தில் தான் மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டேன். அப்போது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு கட்டார் நிதியுதவி செய்யக்கூடாது என வலியுறுத்தினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா மன்னர் சல்மானுடன் போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், வளைகுடா நாடுகள் ஒற்றுமையாகவும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

கட்டாரை தனிமைப்படுத்துவதன் மூலம் இப் பிரச்சினையை தீர்க்க முடியாது. எனவே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

பெரிய கின்னஸ் சாதனை படைக்கயிருக்கும் நாய்

wpengine

2ஆம் திகதி சிவகரனுக்கு பயங்கரவாத பிரிவு விசாரணை

wpengine

அன்று அஷ்ரஃபுக்கு இன்று றிஷாதுக்கு எதிராக! நாளை ஹக்கிமுக்கும் வரலாம்.

wpengine