கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் ஆராயும் குழுவை நியமிக்க ரணில் நடவடிக்கை

கஞ்சா பயிரை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானத்தை உழைப்பது சம்பந்தமாக ஆராயும் யோசனை ஒன்றை முன்வைப்பதாக ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், கஞ்சாவை ஏற்றுமதிக்காக மாத்திரம் பயிரிடுவது தொடர்பாக ஆராய விசேட குழுவை நியமிக்குமாறு யோசனை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்ய பயிரிட வேண்டும் என்ற யோசனையை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்ந்தும் முன்வைத்து வந்துள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை வருவாயாக ஈட்ட முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.

கஞ்சா பயிரானது ஆயுர்வேத மருந்துகள், வாசனை திரவியங்கள் உட்பட பல தயாரிப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares