பிரதான செய்திகள்

ஒழுக்காற்று விசாரணைக்கு அஞ்ச போவதில்லை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனையில் இடம்பெறும் மே தினக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சியினால் எத்தகைய ஒழுக்காற்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டாலும் அது குறித்து கவலையில்லை என்றும் அந்த உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தினக்கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ மற்றும் சாலிந்த திசாநாயக்க ஆகியோர் தலைமையில் குருநாகலையில சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதனையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இதனை தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மக்கள் துரோக அரசாங்கத்திற்கு எதிரான ஒரேயொரு மே தின கூட்டம் கிருலப்பனையிலே இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

அரசாங்கம் பிரிந்து மே தினக்கூட்டங்களை நடத்தவுள்ளது. எனினும், மக்கள் துரோக அரசாங்கத்திற்கு எதிரான கூட்டம் கிருலப்பனையிலே இடம்பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒழுக்க விசாரணைகளுக்கு அஞ்சி தாம் அரசியலில் ஈடுபடுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒழுக்காற்று விசாரணைகளுக்கு அஞ்சி அரசியல் செய்பவர்கள் அல்ல நாங்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தோல்வியடைய முழு காரணமாக இருந்தவர்களே இன்று ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

இளவரசர் ஹரியின் திருமண மோதிரத்தின் இரகசியம்

wpengine

வடமாகாண அமைச்சர் விசாரணை இன்று

wpengine

சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ரணிலுடன் மோதல்

wpengine