பிரதான செய்திகள்

ஜனாதிபதி தாமதிக்காமல்,உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

ஊடகப்பிரிவு-

நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி,இன்று(29) பாராளுமன்றில் பிரதமர்அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்குஅமைவாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையபாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன்,கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற செயற்பாடுகள் எவ்வாறு இருந்ததோ, அதேபோன்ற நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தாமதிக்காமல்,உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பான் கீ மூனை சந்தித்துப் பேச்சு

wpengine

இலங்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய சுற்று நிருபம்

wpengine

சஜித்துடன் முரண்பட்ட ஹர்ஷ டி சில்வா மீண்டும் இணைவு

wpengine