உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் பல நாடுகள்

ஐக்கியநாடுகள் சபை மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி, வடகொரியா மீண்டும் ஜப்பான் கடலில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளது.

 

மேலும் குறித்த ஏவுகணை பரிசோதனையானது, ஜப்பான் மற்றும் கொரிய கடல் பகுதிக்கு இடையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த ஏவுகணை பரிசோதனையை வடகொரிய ஜனாதிபதி கிங் ஜோங் உன் பார்வையிட்டதாக தென் கொரிய மற்றும் ஜப்பானிய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

வடகொரியாவின் குறித்த ஏவுகணையானது, சுமார் 450 கிலோமீற்றர்கள் வரை சென்று, இலக்கை தாக்கக்கூடிய வல்லமை உடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, குறித்த ஏவுகணை பரிசோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உலக நாடுகளின் கண்டனத்தை மீறி, தமது நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் வடகொரியாவின் செயற்பாடுகளுக்கு முடிவை ஏற்படுத்துவதற்கு, தாம் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மூன் ஜெ-இன், தான் தகுந்த சமயம் பார்த்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இருநாட்டு அச்சுறுத்தல்களுக்கு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதற்காக செயற்படுவதற்கு தான் ஆர்வமாகவுள்ளதாக அறிவித்திருந்த சில நாட்களிலேயே, வடகொரியாவின் குறித்த ஏவுகணை பரிசோதனையானது பதற்ற நிலையை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

மேலும் ஜி 7 நாடுகளின் மாநாட்டில் வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை பரிசோதனைகளுக்கு எதிரான கண்டா அறிக்கையொன்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு முடிவை ஏற்படுத்துவதற்கு எத்தனித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related posts

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களின் அவலம்!

Editor

பயணத்தடை தொடர்பில் மீண்டும் புதிய நடைமுறை அத்தியாவசிய தேவைகள் எவை

wpengine

முதல் தடவை இலங்கைக்கான விஜயம் துருக்கி அமைச்சர்

wpengine