எரிபொருள் தட்டுப்பாடு அமைச்சர்கள் விமானத்தில் பறக்க முடியாது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

​​எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதற்கு இலங்கை விமானப்படை அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.  

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares