எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சிறப்பான திறமையானவர் மஹிந்த

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சிறப்பான திறமை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளர்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,


எந்த அடக்குமுறை அரசாங்கமாக இருந்தாலும் முதலில் எதிர்க்கட்சியை பிளவுப்படுத்தும்.


மகிந்த ராஜபக்சவுக்கு இந்த திறமை உள்ளது. மகிந்த ராஜபக்ச தன்னுடன் இணைத்து கொண்டவர்கள் மற்றும் கட்சியை இல்லாமல் ஆக்கினார்.


மக்கள் விடுதலை முன்னணியை பிளவுப்படுத்தினார். எந்த கட்சியை பிளவுப்படுத்தவில்லை.
அந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும் பிளவுப்படுத்தினார் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares