உயர்பீட உறுப்பினர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மாணித்துள்ளதாக தகவல்கள்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த  உயர்பீட உறுப்பினர்களான கலீல் மவ்லவி மற்றும் இல்யாஸ் மவ்லவி ஆகியோரை இடைநிறுத்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இன்னும் சில கட்சி உயர்பீட உறுப்பினர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்த கட்சித்தலைவர் தீர்மாணித்துள்ளதாக அக்கட்சி உயர்மட்ட தகவல்கள்  தெரிவித்தன.
கட்சியின் பிரபல பதவிகளில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரை கட்சி பதவிகளில் இருந்து வெளியேற்ற தலைவர் பட்டியலை தயார்படுத்திவிட்டதாகவும் வரும் நாட்களுக்குள் இது உத்திகியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

குறித்த பட்டியலில் கட்சி செயளாலர் ஹசனலி தவிசாளர் பஷீர் உள்ளிட்ட கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் சிலர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பதவி பறிப்புக்களின் பின்னர் தலைவருக்கு விசுவாசமான உயர்பீட உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேற்ற முடியாத (தலைவரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்ககூடிய) சில உறுப்பினர்களும் கட்சியில் தங்குவார்கள் என தெரிகிறது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares