உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இளவரசர் ஹரியின் திருமண மோதிரத்தின் இரகசியம்

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் ஹாலிவுட் நடிகை மெர்க்கல் திருமண நிச்சயதார்த்தம் இந்த வாரத்தில் நடைபெறும் என பல்வேறு பத்திரிகைகள் தவவல் வெளியிட்டுள்ளன.

இளவரசரின் திருமண நிச்சயதார்த்தம் நெருங்கி வரும் நிலையில் மோதிரம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளன.

அதில் ஹரியின் தாயாரும் மறைந்த இளவரசி டயானாவுக்கு சொந்தமான நகைகளில் இருந்து குறிப்பிட்ட வைரத்தை தெரிவு செய்து அதில் தமது நிச்சயதார்த்த மோதிரம் தயார் செய்வது குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1997 ஆம் ஆண்டு சாலை விபத்தில் இளவரசி டயானா இறக்கும் போது அவரது சபையர் நிச்சயதார்த்த மோதிரத்தை ஹரியிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் தன்னலம் கருதாத இளவரசர் ஹரி குறித்த மோதிரத்தை தமது சகோதரர் இளவரசர் வில்லியம் திருமணத்தின்போது அவரது நிச்சயதார்த்த மோதிரமாக பயனபடுத்த வழங்கியுள்ளார்.

தற்போது அந்த மோதிரத்தை இளவரசர் ஹரி பயன்படுத்த முடியாததால், தமது நிச்சயதார்த்த மோதிரமாக இளவரசி டயானா தமது தலையில் கிரீடமாக பயன்படுத்திய மரகத வைரத்தில் தயார் செய்த மோதிரத்தை தமது நிச்சயதார்த்த மோதிரமக பயனப்டுத்துவார் என அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இளவரசர் வில்லியம் தமது நிச்சயதார்த்த மோதிரமாக பயன்படுத்திய குறித்த சபைர் மோதிரமானது சவுதி அரச குடும்பத்தினர் இளவரசி டயானாவின் திருமண பரிசாக வழங்கினர் என்பது கூடுதல் தகவல்.

Related posts

பொது மக்களுக்கு அறிவித்தல்! வவுனியாவில் சுவரொட்டிகள்

wpengine

நெஞ்சை நிமிர்த்தி நின்று முகம் கொடுத்து வரும் மு.கா. தலைவர் ஹக்கீம்!

wpengine

பௌத்த மதத்திற்கு உயிரை கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர் ஹபீர்

wpengine