பிரதான செய்திகள்

இளம் தமிழ் பெண் நண்பர்களின் சோக கதை

தோழிகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியொன்று பதுளை , மடுல்சீமை பிரதேசத்தில்  பதிவாகியிருந்தது.


இவ்வாறு தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட இருவரும் சிறுவயதில் இருந்து தோழிகளாக இருந்தவர் என தெரியவருகின்றது.

செல்வகுமார் காஞ்சனா மற்றும் பரமேஸ்வரன் அருள்செல்வி என்ற 17 வயதான யுவதிகளே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருந்தனர்.

காஞ்சனா , அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை கடந்த 30 ஆம் திகதி அவரைக் கண்டித்துள்ளார்.

இதனை அடுத்து மனமுடைந்து போன அவர் , தனது நண்பியுடன் சேர்ந்து தற்கொலை
செய்துகொண்டுள்ளார். இச்சம்பவத்தின் போது ஒரு பெண் வீட்டிலேயே உயிரிழந்திருந்ததுடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இருவரும் , ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி பயின்றுள்ளதுடன், சிறுவயது முதலே இணைபிரியாத நண்பிகளாக இருந்துள்ளனர்.

மரணத்தில் கூட இருவரும் ஒன்றாக உயிரிழந்தமையானது பிரதேசவாசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

ரிசாத் பதியுதீனின் கைது முஸ்தீபு நீதிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கலங்கமாகும்!

wpengine

வவுனியாவில் உலர் உணவு பொதிகள் வினியோகம்

wpengine

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த கொள்கலனின் ஹெரோயின் – ஒருவர் கைது!

Editor