பிரதான செய்திகள்

இரண்டு கோடி கஜமுத்துக்களுடன் கண்டியில் நால்வர் கைது.

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் கண்டியில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், இந்த கஜமுத்துக்களை விற்க முயற்சித்த போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் விசேட படையினரின் ஒத்துழைப்புடன் இன்று  (23) பகல் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் 24- 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் கண்டி- கிரிபத்கும்பர பிரதேசத்தைச்  சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த கஜமுத்துக்கள் இரண்டும் மொனராகலை பிரதேசத்திலிருந்து தமக்கு கிடைத்ததென சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Related posts

மாவில்லு பிரகடனம்! சுயாதீன குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி முடிவு

wpengine

ரணில்,மைத்திரி மோதல் மீண்டும் ஆரம்பம்

wpengine

225 பேருக்கும் பொறுப்புள்ளது – ஜனாதிபதி

wpengine