உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இன்று காஷ்மீர் செல்லும் ராணுவ தளபதி தல்பீர் சிங்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 60 நாட்களுக்கு மேலாக பதற்றம் நிலவி வந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் அமைதி திரும்பி வருகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி குழு காஷ்மீர் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டு வந்தது.

இந்நிலையில், ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மட்டுமல்லாமல் எல்லைப் பகுதியிலும் (எல்.ஓ.சி) ஒரு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் இதுவரை 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகமானோர் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

Related posts

வன்னி பல்கலைக்கழகம் கோரி மாபெரும் பேரணி

wpengine

அபிவிருத்தி குழு கூட்டத்தில் தூங்கியதாக வெளியான செய்தியினை மறுக்கிறார் -மஸ்தான் (பா.உ)

wpengine

இந்தோனேஷியாவில் பூமியதிர்ச்சி!

wpengine