பிரதான செய்திகள்

இனவாதத்தினை தூண்டும் வட மாகாண சபை! அமைச்சர் மஹிந்த அமரவீர

வட மாகாண சபையில் முன்மொழியப்பட்டுள்ள யோசனை, இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியுள்ளது.

அந்த கட்சியின் செயலாளரும், மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் முன்மொழியப்பட்டுள்ள யோகனை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு, நாட்டில் நல்லிணக்கம் உருவாகி வரும் நிலையில் வட மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனை பொருத்தமற்ற ஒன்று என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இனவாதத்தை மாத்திரமே நோக்காக கொண்டு செயற்படும் வட மாகாண சபை உறுப்பினர்களின் இந்த யோசனை அப்பாவி தமிழ் மக்களையே பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.

எனவே, வட மாகாண சபையில் முன்மொழியப்பட்டுள்ள இந்த யோசனை உண்மையில் தவிர்க்கப்பட வேண்டியதொரு விடயமாகும் என அவர் குறிப்பி்ட்டுள்ளார்..

அனைவரையும் இலங்கையர் என்ற நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வுக்கு அதிகூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இவ்வாறானதொரு முன்மொழிவு அனைத்து முயற்சிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும்” என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வட மாகாண சபையின் இந்த யோசனையினை தென் மாகாண மக்கள் இதனை வித்தியாசமான கண்ணோட்டத்திலேயே பார்ப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக அநாவசியமாக இனவாதம் தூண்டப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இனவாதத்தை மறந்து ஒரு நாடு என்ற நினைப்பில் செயற்பட்டு வரும் நிலையில் இவ்வாறானதொரு தீர்மானம் தேவையற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேங்காயின் விலையினை கேட்டு ஒடிய முதியோர்

wpengine

மஹிந்த,சமல் ஆகியோரின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

wpengine

ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

wpengine