வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வீதியை புனரமைப்பு செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அதற்கு முன்னர் இரு மாகாணங்களையும் சேர்ந்த முதலமைச்சர்களின் ஒப்புதலை அவர்கள் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இன்றைய தினம் வடமாகாண சபையின் 83ம் அமர்வு நடைபெற்றிருந்தது. இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வீதியை புனரமைப்பு செய்யவேண்டும் என பிரதி அவை தலைவர் கே.வி.கமலேஸ்வரன் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார்.
அதற்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் குறிப்பிட்ட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வீதியை புனரமைத்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படுமாக இருந்தால் அந்த வீதியை புனரமைப்பு செய்யலாம் என்றார்.