இந்தப்பிரதேசத்து மாணவர்களின் கல்வியை உயர்வடையச்செய்ய வேண்டும் -அமீர் அலி

(அபூ செய்னப்)

இந்தப்பிரதேசத்து மாணவர்களின் கல்வியை உயர்வடையச்செய்ய வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்களை இந்தப்பிரதேசத்து கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு,பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச இணைப்புக்குழு கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரான பிரதியமைச்சர் அமீர் அலி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்த பிரதேசத்தில் கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை பற்றி இங்கு ஆராயப்பட்டது,பிரதேசத்தில் கடமையாற்றும் அரச மற்றும் அரச்சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கல்வி அபிவிருத்தி,சுகாதார சேவைகள்,தெங்கு பனை அபிவிருத்தி,விவசாய அபிவிருத்தி,வீதி அபிவிருத்தி,மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்பயிற்சி,குடிநீர்ப்பிரச்சினை இப்படி பல்வேறு விடயங்களின் அபிவிருத்தி பற்றி இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டது.2aef97d5-1870-4e65-b0c6-dd163ede79cf

களவாக மண் அகழ்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் போது சட்டவிரோத மண் அகழ்வாலர்களை கட்டுபடுத்தும் வழிவகைகளை பிரதி அமைச்சர் அமீர் அலி முன்மொழிந்தார்.காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து இந்தப்பிரதேசத்தில் உள்ளவர்களை பாதுகாக்க தீர்க்கமான முடிவுகள் தேவை என பிரதியமைச்சர் தெரிவித்தார். அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு உதவும் கொண்டவர்களாக இருக்கவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares