பிரதான செய்திகள்

ஆபாச காணொளிகளை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த நபரொருவர் கைது

மன்னார்  வங்காலைபாடு பிரதேசத்தில் 5 ஆம் தர மாணவிக்கு ஆபாச காணொளிகளை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள்
தெரிவித்துள்ளார். குறித்த சிறுமி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்றுள்ளதுடன்,
அன்று அந்த வகுப்பு இடம்பெறவில்லை.

இதன் போது அருகில் இருந்த நபரொருவர் இந்த சிறுமியை அழைத்து சென்று ஆபாச
காணொளிகளை காட்டி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
எனினும் குறித்த சிறுமி அங்கிருந்து தப்பித்து சென்று சம்பவத்தினை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பின்னர் பேசாலை காவற்துறையினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Related posts

நீல ஆடையில் தலைக்கு எண்ணெய் வைக்கும் மஹிந்த

wpengine

கட்டார் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­த இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஒருவர்

wpengine

பயங்கரவாத விடுதலை புலிகளின் செயற்பாடுகளை இனியும் முளைக்க விடக்கூடாது

wpengine