பிரதான செய்திகள்

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்ட மக்கள்

பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளர்.

இன்றைய தினம் மிகவும் முக்கியமான தீர்மானகரமான நாள்.
நாட்டின் எதிர்காலத்தை நல்ல திசை நோக்கியும் நாட்டுக்கு ஏதுவான வகையிலும் மாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொடுக்க நடவடிக்கை எடுத்த வரலாற்று சிறப்புமிக்க தினமாக இன்றைய தினத்தை கருத முடியும்.

பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டதாக நாங்கள் மட்டும் கூறவில்லை. கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு மக்களும் இதனை கூறினர்.

பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களும் இதனை கூற ஆரம்பித்தனர்.

அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் அமைச்சர்கள், தற்போதைய பிரதமருடன் இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது எனக் கூறி கடிதங்களை கையளிக்க ஆரம்பித்தனர்.

இதனால், அரசாங்கத்திற்குள்ளும், நாடாளுமன்றத்திலும் பிரதமர் நம்பிக்கை இழந்து விட்டார் என்பது உறுதியாகியுள்ளது என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Turkish Parliament Punch-Up (Video)

wpengine

மடு புனித பிரதேசம்! ஜனாதிபதி செயலாளர் தலைமையில் கூட்டம்

wpengine

வசீம் தாஜுதீனின் கொலை! பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மீண்டும் விளக்கமறியல்

wpengine