அம்பாறையில் குழப்பத்தை ஏற்படுத்திய “சிங்க லே“! அமைப்பு

முன்னாள் போராளிகளின் திடீர் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ‘சிங்க லே’ அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.

பொலிஸார் முன்பாகவே சிங்கலே அமைப்பினர், போராட்டக்காரர்களுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்தமை அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. காணாமல்போனவர்களினுடைய குடும்பங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறையில் நேற்றுமுன் தினம் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை ஆரம்பமானது. இதன் பின்னர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் உள்ள அம்பாறை மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்று மனுக் கையளிக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர்.singhale2

அதற்கமைய அவர்கள் மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்றனர். இதன்போது திடீரென, பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் அங்கு வந்திறங்கினர்.

பெரும் சத்தம் எழுப்பினர். போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டினர்.

அவர்களில் சிலர் சிங்க லே வாசகம் அடங்கிய ரீசேர்ட்டுக்களையும் அணிந்திருந்தனர். பொலிஸாருக்கு முன்பாகவே போராட்டக்காரர்களுடன் வந்திறங்கிய குழுவினர் முரண்பட்டனர்.

தாக்கவும் முயற்சி செய்தனர். இருப்பினும் மோதல் ஏற்படாமல் பொலிஸார் பார்த்துக் கொண்டனர். இறுதியில் பொலிஸாரின் பாதுகாப்புடன், அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் அமீரிடம், மனுவை போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares