பிரதான செய்திகள்

​அந்நிய செலாவணி இல்லாமல் செய்ய பெற்றோல்-ரூ.35 டீசல்- ரூ.24 ம​ண்ணெண்ணை –ரூ.14 விலை அதிக்க வேண்டும்

எரிபொருட்களின் விலைகளை உடனடியாக அதிகரிக்கவேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் கடந்த 10ஆம் திகதியன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார சிக்களுக்கு மத்தியில் எரிபொருள்களை இறக்குமதிச் செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க டொலர்களை பயன்படுத்தினால், ​அந்நிய செலாவணி இல்லாமல், நாடு பெரும் பிரச்சினைக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும்.

அதனால், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 35 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 24 ரூபாவினாலும் மண்ணெண்ணெ ஒரு லீற்றரின் விலையை 11 ரூபாவினாலும் அதிகரித்தால் மட்டுமே நிர்வகிக்கமுடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், இந்த கோரிக்கைக்கு நிதியமைச்சரிடமிருந்து இருந்து எவ்விதமான பதிலும் இதுவரையிலும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது.  

Related posts

வாகன பிரியர்களுக்கு மங்கள கொடுத்த சந்தோஷம்

wpengine

வவுனியாவில் 40 மணித்தியாளங்கள் மின் துண்டிப்பு , மின்சார சபையின் அசமந்தம்..!

Maash

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்.

Maash